மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் திருவிளக்கு பூஜை
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் உலக நன்மைக்காக 508 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்துக்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயிலில் வருடம் தோறும் மாசி மாதம் உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்க வேண்டியும், மக்கள் நோய்,நொடி இல்லாமல் வாழ வேண்டியும் 508 திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். இந்தாண்டிற்கான விழா நேற்று மாலை 6:00 மணிக்கு துவங்கியதையடுத்து ஆனந்தவல்லி அம்மன் சர்வ அலங்காரங்களுடன் கோயில் முன் மண்டபத்தில் எழுந்தருளினார். மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டு விளக்குகளை ஏற்றி வைத்து அம்மனை வழிபட்டனர். திருவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகளை கோயில் மகளிர் உழவார பணியாளர்கள்,தேவஸ்தான கண்காணிப்பாளர் சீனிவாசன் மற்றும் அர்ச்சகர்கள் ராஜேஷ்,குமார்,சுந்தரராஜ், பரத்வாஜ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்