ஜடாயுபுரீஸ்வரர் கோவிலில் மாசிமக பிரம்மோற்சவம்; தியாகராஜர் உன்மத்த நடனம்
ADDED :290 days ago
காரைக்கால்; காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வரர் கோவிலில் மாசிமக பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு தியாகராஜர் உன்மத்த நடனம் நடந்தது. மாசிமக பிரம்மோற்சவ விழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினந்தோறும் பல்வேறு அலங்கார வாகனங்களில் ஜடாயுபுரீஸ்வரர், அம்மன் வீதியுலா நடந்தது. முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் தியாகராஜர் புறப்பாடு உன்மத்த நடனம் நடந்தது. எம்.எல்.ஏ., நாகதியாகராஜன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று 10ம் தேதி தெருவடைச்சான் சப்பரம், வரும் 12ம் தேதி தேர் திருவிழா, அன்றிரவு ஜடாயு, ராவண யுத்தமும் நடக்கிறது. வரும் 14ம் தேதி தெப்ப திருவிழா நடக்கிறது.