கோவில் மண்டபத்தில் வளர்ந்துள்ள செடிகளால் சிற்பங்கள் சேதம்
ADDED :204 days ago
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் கோவில் பிரதான ராஜகோபுரத்திற்கும், 16 கால்மண்டபத்திற்கும் இடையே, நான்குகால் மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தை கன்னடியர் மண்டபம் என, அழைக்கின்றனர். இம்மண்டபத்தை கோவில் நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், மண்டபத்தின் கூரையில் அரசமரச் செடிகள் வளர்ந்துள்ளன. இச்செடிகளின் வேர் களால் நான்குகால் மண்டபத்தில் உள்ள சிற்பங்கள் சேதமாவதுடன், விரிசல் ஏற்பட்டு நாளடைவில் மண்டபம் முற்றிலும் வலுவிழுந்து இடிந்து விழும் சூழல் உள்ளது. எனவே, மண்டபத்தில்வளர்ந்து வரும் அரசமரச்செடிகளை வேருடன் அகற்ற, கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்களிடமிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.