பரங்கிப்பேட்டை அமிர்தவல்லி உடனுறை ஆதிமூலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :200 days ago
பரங்கிப்பேட்டை,; பரங்கிப்பேட்டை அமிர்தவல்லி உடனுறை ஆதிமூலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. பரங்கிப்பேட்டை அகரத்தில் அமிர்தவல்லி உடனுறை ஆதிமூலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 1ம் தேதி முதல் கால யாக பூஜை, 2ம் தேதி இரண்டாவது மற்றும் மூன்றாம் கால யாக பூஜையும், 3ம் தேதி நான்கு மற்றும் ஐந்தாம் கால யாக பூஜையும் நடந்தது. இன்று காலை 6ம் கால யாக பூஜை நடந்தது. தொடர்ந்து 9:00 மணிக்கு யாக சாலையில் இருந்து கலசம் புறப்பட்டு காலை 9:30 மணிக்கு கோபுரத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.