திருவாதிரை விரதம்; நடராஜரை தரிசித்து ஆடல்வல்லானின் அருளை பெறுவோம்!
ADDED :198 days ago
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதமாகவும் இருப்பவர் சிவன். திருவாதிரை நடராஜரை வழிபட சிறந்த நாள் ஆகும். இன்று அனைத்து சிவாலயங்களிலும் நடராஜருக்கு திருமஞ்சனம் நடக்கும். முருகப்பெருமான் இந்த விரதம் இருந்து ஈசனின் அருள்பெற்றார். நட்சத்திரங்களில் ‘திரு என்ற அடைமொழியோடு வருவது ஆதிரை மற்றும் ஓணம் மட்டுமே. ஆடல்வல்லானின் ஆட்டத்தாலேயே அண்டசராசரங்களும் இயங்குகின்றன. வீட்டில் சிவபுராணம், தேவாரம், திருவாசகத்தை பக்தியுடன் படிக்க வேண்டும். மாதந்தோறும் திருவாதிரை விரதமிருந்து கயிலாயத்தில் வாழும் பேறு பெறுவோம்..!