உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அதிகார நந்தி வாகனத்தில் அசைந்தாடி வந்த மண்ணடி மல்லிகேஸ்வரர்

அதிகார நந்தி வாகனத்தில் அசைந்தாடி வந்த மண்ணடி மல்லிகேஸ்வரர்

சென்னை; மண்ணடி, மல்லிகேஸ்வரர் கோவில் பங்குனி திருவிழாவின் மூன்றாம் நாளான இன்று மரகதாம்பாள் சமேத உற்சவர் -மல்லிகேஸ்வரர் தங்கம் முலாம் பூசிய அதிகார நந்தி வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.


மண்ணடி, லிங்கி செட்டி தெருவில், சென்னை, முத்தியால்பேட்டை மரகதாம்பாள் சமேத மல்லிகேஸ்வரர் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த கோவிலில், பங்குனி மாத 14 நாள் பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 3ம் நாளான இன்று காலை தங்கம் முலாம் பூசிய அதிகார நந்தி வாகனத்தில் மரகதாம்பாள் சமேத உற்சவர் -மல்லிகேஸ்வரர் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான, 63 நாயன்மார்கள் உற்சவம், 7 ம் தேதியும் ; திருத்தேர் உற்சவம், 9 ம் தேதியும் நடக்கிறது. வரும் 11 ம் தேதி இரவு புஷ்ப பல்லக்கு, 13 ம் தேதி இரவு பந்தம் பறி உற்சவம் நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !