வடமதுரை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED :349 days ago
வடமதுரை; வடமதுரை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடந்தது. ஏப்.7ல் மகா கணபதி பூஜையுடன் துவங்கிய விழாவில் 4 கால யாக வேள்வி பூஜைகள் நிறைவடைந்ததும் இன்றுகாலை கடம் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்ற கும்பாபிஷேகம் நடந்தது. திண்டுக்கல் பிரசன்ன வெங்கடேஷ், கரூர் மகாதானபுரம் காந்திகிருஷ்ணா தலைமையிலான குழுவினர் கும்பாபிஷேகத்தை நடத்தினர். பேரூராட்சி தலைவர் நிருபாராணிகணேசன், துணைத் தலைவர் மலைச்சாமி, செயல் அலுவலர் பத்மலதா, கவுன்சிலர்கள் மருதாம்பாள், சகுந்தலா, சுப்பிரமணி, தி.மு.க., நகர செயலாளர் கணேசன், பொருளாளர் முரளிராஜன், காங்., வட்டார தலைவர் ராஜரத்தினம், கோயில் தக்கார் சீனிவாசன், ஹிந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் சுரேஷ்குமார் பங்கேற்றனர்.