உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி விழா பூ கரக ஊர்வலம்

திருத்தணி முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி விழா பூ கரக ஊர்வலம்

திருத்தணி;திருத்தணி நகராட்சி, முத்துமாரியம்மன் கோவிலில். ஆண்டுதோறும் பங்குனி மாத திருவிழா விமரிசையாக நடந்து வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டிற்கான 13ம் ஆண்டு விழா, கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனையும், மாலை சந்தன காப்பு நிகழ்ச்சி நடந்து வந்தன. கடந்த 7ம் தேதி காலை மூலவர் அம்மனுக்கு சந்தன காப்பு மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. இன்று காலை 9:00 மணிக்கு சக்தி கரகம் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. தொடர்ந்து, திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் கூழ் வார்த்தல் மற்றும் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். பக்தர்கள், தீச்சட்டி ஏந்தி ஊர்வலமாக கோவிலுக்கு வந்து, நேர்த்திக்கடனை செலுத்தினர். நாளை காலை அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், நாளை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் உற்சவர் அம்மன் வீதியுலாவுடன், 13ம் ஆண்டு திருவிழா நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை பகுதிவாசிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !