திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேரோட்டம்; பக்தர்கள் பரவசம்
திருச்சி; திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
உலகப் புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தமிழக மட்டும் இன்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவது வழக்கம். ஒவ்வொரு நாளும் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இன்று சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இக்கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் தினமும் காலை, மாலையில் பல்வேறு வாகனங்களிலும் அம்மன் எழுந்தருளி அருள்பாலித்து வந்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். தேரில் சிறப்பு பூஜைகள்நடத்தப்பட்டு காலை தேரோட்டம் தொடங்கியது. லட்சக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். ஆடி அசைந்து வ்நது தேரை ஏராளமான பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர். தேரோட்டத்தையொட்டி 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.