உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் நாளை ராகு – கேது பெயர்ச்சி சிறப்பு பூஜை

மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் நாளை ராகு – கேது பெயர்ச்சி சிறப்பு பூஜை

புதுச்சேரி; மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் நாளை மாலை ராகு–கேது பெயர்ச்சி சிறப்பு பூஜை நடக்கிறது. புதுச்சேரி–திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை மொரட்டாண்டியில் அமைந்துள்ள 27 அடி உயர சனீஸ்வரர் கோவிலில் நவக்கிரக பெயர்ச்சிகளின் போது சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, நாளை (26ம் தேதி) மாலை 4:20 மணிக்கு, ராகு பகவான் மீனம் ராசியில் இருந்து கும்ப ராசிக்கும், கேது பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கும் இடம் பெயர்ச்சியாகின்றனர்.


அதையொட்டி, மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள 12 அடி உயர ராகு மற்றும் கேது பகவான்களுக்கு நாளை சிறப்பு பூஜை நடக்கிறது. காலை 11:00 மணிக்கு நட்சத்திர ராசி பரிகார ஹோமம், மகா பூர்ணாஹூதியை தொடர்ந்து பகல் 12:00 மணிக்கு சகல அபிஷேகம் மற்றும் 108 லிட்டர் பால் அபிஷேகம் நடக்கிறது. மாலை 4:20 மணிக்கு ராகு மற்றும் கேது பகவான்களுக்கு பஞ்சலோக ஆபரண கவசம் சாற்றி. மகா தீபாராதனை நடக்கிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. பூஜைகள் அனைத்தும் சிதம்பர கீதாராம் குருக்கள் தலைமையில் நடக்கிறது. இந்த சிறப்பு பூஜையில் பங்கேற்க பாலாபிஷேகத்திற்கு ரூ.200, பரிகார ஹோமத்திற்கு ரூ.2,000 மற்றும் தோஷ பரிகார அர்ச்சனைக்கு ரூ.500 கோவில் அலுவலகத்தில் செலுத்தி, ரசீது பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !