உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவையின் குலதெய்வம்; தண்டு மாரியம்மனுக்கு தமிழில் லட்சார்ச்சனை

கோவையின் குலதெய்வம்; தண்டு மாரியம்மனுக்கு தமிழில் லட்சார்ச்சனை

கோவை; கோவையின் குலதெய்வம் என்று அழைக்கப்படும் அருள்மிகு தண்டு மாரியம்மன் கோவில் சித்திரை விழா கடந்த 14ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் அன்றாடம் யாகசாலை பூஜைகளை தொடர்ந்து ஒவ்வொரு வாகனங்களில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார். இதில் முக்கிய நிகழ்வான 11ம் நாளான இன்று வெள்ளிகிழமை அம்மனுக்கு  தமிழில் லட்சார்ச்சனை நடைபெற்றது. உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !