உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிங்கம்புணரியில் அரசு, வேம்பு மரங்களுக்கு திருக்கல்யாணம்

சிங்கம்புணரியில் அரசு, வேம்பு மரங்களுக்கு திருக்கல்யாணம்

சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் அரசு, வேம்பு மரங்களுக்கு திருக்கல்யாணம் நடந்தது. இங்குள்ள செட்டியார்குளம் கரையில் பழமையான ராஜவிநாயகர் கோயில் உள்ளது. மதுரையில் திருக்கல்யாணம் நடைபெறும் நாளில் இக்கோயிலில் உள்ள பல நூறாண்டு பழமையான அரசு, வேம்பு மரங்களுக்கும் திருக்கல்யாணம் நடத்தப்படுவது வழக்கம். நேற்று பூஜகர்கள் சிறப்பு வழிபாடு நடத்தி மரங்களுக்கு திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திருக்கல்யாணம் நடைபெற்ற போது பெண்கள் தங்களது மாங்கல்ய கயிறுகளை புதிதாக மாற்றிக் கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !