உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை விளையாட்டு மாரியம்மன் - முத்து கருப்பர் கோவிலில் திருக்கல்யாணம்

கோவை விளையாட்டு மாரியம்மன் - முத்து கருப்பர் கோவிலில் திருக்கல்யாணம்

கோவை; ராம் நகர் ராஜாஜி ரோடு ஸ்ரீ விளையாட்டு மாரியம்மன் - முத்து கருப்பர் கோவில் 41-.ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவ விழா கடந்த 29ம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.  தொடர்ந்து கோவில் வளாகம் முன்பு பூ கம்பம் நடுதல் விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து அக்னி கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வான திருவிளக்கு பூஜை கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர். இதில் உற்சவர் அம்மன் சிறப்பு தோற்றத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !