பழநி காணிக்கை ரூ.2.74 கோடி
ADDED :212 days ago
பழநி முருகன் கோவிலில், நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. 2 கோடியே 74 லட்சத்து 24,650 ரூபாய், 291 வெளிநாட்டு கரன்சி, 571 கிராம் தங்கம், 11.856 கிலோ வெள்ளி கிடைத்தது.
திருப்பூர், கோபி, திருப்பத்துார், பவானி, பழநி, கோவை பகுதி உழவாரப்பணி ஸ்ரீ வாரி சேவா சங்கம், சிவனடியார் கூட்டமைப்பு, மகாவிஷ்ணு சேவா சங்கம், நாமக்கல் சிவனடியார் திருக்கூட்டத்தினர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.