உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேடசந்துார் மாரியம்மன் கோயிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்

வேடசந்துார் மாரியம்மன் கோயிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்

வேடசந்துார்; வேடசந்துார் மாரியம்மன் கோயிலில் வருடாந்திர விழாவை முன்னிட்டு கரகம் பாலித்தல், முளைப்பாரி ஊர்வலம், மாவிளக்கு, அக்னி சட்டி எடுத்தல், பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று மாலை 6:30 மணிக்கு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. சிலர் தங்களது குழந்தைகளை துாக்கிக் கொண்டு இறங்கினர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !