உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தி சிவன் கோயிலில் உண்டியல் காணிக்கை கணக்கிடும் பணி

காளஹஸ்தி சிவன் கோயிலில் உண்டியல் காணிக்கை கணக்கிடும் பணி

காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு தினந்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி வெளிநாட்டிலிருந்தும், கோயிலில் நடக்கும் ராகு கேது சர்ப்ப தோஷ நிவர்த்தி பூஜையில் ஈடுபடவும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகின்றனர். அவ்வாறு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடன்களை கோயில் வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள உண்டியல்களில் செலுத்துவது வழக்கம் . இந்த நிலையில் கடந்த 29 நாட்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை கணக்கிடும் பணி கோயில் அதிகாரிகள் முன்னிலையில் நேற்று புதன்கிழமை காலை 7:00 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. இதில் பணமாக ஒரு கோடயே 72 லட்சத்து எழுபதாயிரத்து ஐநூற்று நான்கு ரூபாய், தங்கம் 73 கிராம், 200 மில்லி கிராம், வெள்ளி: 607 கிலோ 100 கிராம் ,வெளிநாட்டுப் பணம் 92 நம்பர் இருந்ததாக கோயில் செயல் அலுவலர் பாபி ரெட்டி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !