பாடலாத்ரி நரசிம்மபெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோத்சவம் துவக்கம்
ADDED :198 days ago
மறைமலை நகர்; சிங்கபெருமாள் கோவில் அனுமந்தபுரம் சாலையில், அஹோபிலவல்லி தாயார் உடனுறை பாடலாத்ரி நரசிம்மபெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட குடைவரை கோவில். ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் வைகாசி பிரம்மோத்சவம் 10 நாட்களும் அதனைத் தொடர்ந்து மூன்று நாட்கள் விடையாற்றி உற்சவம் விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு வைகாசி பிரம்மோத்சவ கொடியேற்றம் இன்று காலை நடந்தது. தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் உற்சவர் பிரகலாத வரதர் மண்டபத்தில் எழுந்தருளி அருள் பாலித்தார். நாளை காலை கருடசேவையும், முக்கிய நிகழ்வாக வரும் 6ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்த வருகின்றனர்.