உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில் கருட சேவை

நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில் கருட சேவை

நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில் கருட சேவை உற்சவம் நடந்தது. நெல்லிக்குப்பம் பாமா ருக்குமணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி காலை சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, கருட வாகனத்தில் வேணுகோபால சுவாமி எழுந்தருளி வீதியுலா வந்து அருள்பாலித்தார். பூஜைகளை ரமேஷ் பட்டாச்சாரியார் செய்தார். இதேப் போன்று, அகிலாண்டேஸ்வரி உடனுறை கைலாசநாதர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. உலக நன்மை மற்றும் மழை வேண்டி பெண்கள் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !