/
கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை சங்கர மடத்தில் ஜகத்குரு சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் ஜெயந்தி விழா
திருவண்ணாமலை சங்கர மடத்தில் ஜகத்குரு சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் ஜெயந்தி விழா
ADDED :200 days ago
திருவண்ணாமலை; திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள சங்கர மடத்தில், ஜகத்குரு சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் ஜெயந்தி மஹோத்ஸவ விழா நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜை நடந்தது.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள சங்கர மடத்தில் காஞ்சி காமகோடி 68வது பீடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் 132- வது ஜெயந்தி மஹோத்ஸவ விழா இன்று நடைபெற்றது. விழாவில் சிறப்பு யாகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மலர் அலங்காரத்தில் மகாபெரியவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிப்பட்டனர்.