உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி திருஆவினன்குடி கோவிலில் கும்பாபிஷேக பாலாலய பூஜை

பழநி திருஆவினன்குடி கோவிலில் கும்பாபிஷேக பாலாலய பூஜை

பழநி; பழநி திருஆவினன்குடி கோயில் கும்பாபிஷேக பணிக்கான பாலாலய யாக பூஜை நடந்தது. முருகனின் மூன்றாம்படை வீடான பழநி திருஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கடந்த 2014 ம் ஆண்டு நடைபெற்றது. இந்நிலையில் கோயில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற பாலாலய பூஜைக்காக நேற்று மாலை முதற்காலயாகம் நடைபெற்றது. இதில் விநாயகர், பூமி, வாஸ்து, கலச பூஜைகள் நடந்தது. கலசங்கள் பாலாலய யாகசாலைக்கு கொண்டு செல்லப்பட்டன. பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !