திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்
புதுச்சேரி; சஞ்சீவி நகர் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். உழவர்கரை நகராட்சி சஞ்சீவி நகரில் சஞ்சீவி விநாயகர், செங்கழு நீரம்மன், திரவுபதியம்மன், கங்கை அம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா, கடந்த மாதம் 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 10ம் தேதி செடல் உற்சவமும், 11ம் தேதி மாரியம்மனுக்கு கும்பம் கொட்டுதலும், 12ம் தேதி பகாசூரன் வதை நடந்தது. அதனை தொர்டந்து 13ம் தேதி அர்ச்சுனனுக்கும், திரவுபதியம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. 14ம் தேதி கிருஷ்ணன் ரதம் ஓட்ட அர்ஜூனன், திரவுபதி அம்மன் சுவாமி வீதி உலாவும்,15ம் தேதி அரவாண் கடபலியும் நடந்தது. நேற்று இரவு 8;00 மணிக்கு தீமிதி திருவிழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் தீமிதித்து, நேர்த்திக் கடன் செலுத்தினர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பாஞ்சாயத்தார்கள் மற்றும் பொது மக்கள் செய்திருந்தனர்.