அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சுந்தர தேவாரம் பதிகம் பாடிய சிவனடியார்கள்
ADDED :128 days ago
அவிநாசி; அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சுந்தர தேவாரம் பதிகங்கள் பாடப்பட்டது. கொங்கேழு சிவ ஸ்தலங்களில் முதன்மையாக விளங்கும் ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் திருவாதவூரர் திருவாசகம் முற்றோதல் குழு சார்பில் 30க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் சுந்தர தேவாரம் பதிகங்கள் பாடினர். அதனைத் தொடர்ந்து சந்திரசேகர பெருமான் மற்றும் சிவகாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.