உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் வைகாசி தேரோட்டம்

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் வைகாசி தேரோட்டம்

சோழவந்தான்; சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நடந்தது. ஜூன் 2ல் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. கடந்த வாரம் தீச்சட்டி, பால்குடம், பூக்குழி உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் நடந்தன. 16ம் நாள் விழாவாக தேரோட்டம் நடந்தது. காலை 7:00 மணியளவில் கோயிலில் இருந்து அம்மன் புறப்பட்டு தேரை வந்தடைந்தார். 8:00 மணியளவில் எம்.எல்.ஏ., வெங்கடேசன், எஸ்.பி., அர்விந்த், டி.எஸ்.பி., ஆனந்தராஜ், இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், பேரூராட்சி சேர்மன் ஜெயராமன், செயல் அலுவலர் செல்வகுமார், உதவி மின் பொறியாளர் கீர்த்திகா வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். தேர் நான்கு ரத வீதிகளில் வலம் வந்தது. குழந்தைகள் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி வீதிகளில் வலம் வந்தனர்.  மாம்பழங்கள், வாழைப்பழங்கள் பக்தர்களால் சூரை விடப்பட்டன. 19ம் தேதி கொடி இறக்கத்துடன், மஞ்சள் நீராடுதல் நடைபெறும். இரவு வைகை ஆற்றில் தீர்த்தவாரி உற்ஸவத்துடன் விழா நிறைவடைகிறது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !