உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தி தர்மராஜர் கோவில் திருவிழா சுவரொட்டி வெளியீடு

காளஹஸ்தி தர்மராஜர் கோவில் திருவிழா சுவரொட்டி வெளியீடு

காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் துணை கோவிலான  திரௌபதி சமேத  தர்மராஜர் சுவாமியின் வருடாந்திர திருவிழா இம்மாதம் 27ம் தேதி துவங்குகிறது. இந்த நிலையில் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் வளாகத்தில் வீற்றிருக்கும்  தட்சிணாமூர்த்தி சந்நிதியில், திரௌபதி சமேத ஸ்ரீ தர்மராஜர் சுவாமி கோயில் திருவிழா சுவரொட்டிகளை, சிவன் கோவில் செயல் அலுவலர் பாபிரெட்டியுடன் இணைந்து வெளியிட்டனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக காளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ. பொஜ்ஜல. சுதிர் ரெட்டி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !