கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் சிறப்பு அபிஷேகம்
ADDED :475 days ago
கோவை; ஆனி மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. இதில் உற்சவர் மலையப்ப சுவாமி சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.