உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொண்டத்து காளியம்மன் கோவில் ஐந்து நிலை கொண்ட ராஜ கோபுரம் : கால்கோள் விழா

கொண்டத்து காளியம்மன் கோவில் ஐந்து நிலை கொண்ட ராஜ கோபுரம் : கால்கோள் விழா

பெருமாநல்லூர்; திருப்பூர், அடுத்த பெருமாநல்லுரில் புகழ் பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. கோவில் பழைய கட்டத்தில் இயங்கி வருகிறது. கோவிலை புணரமைப்பு செய்து, புதுபிக்க பக்தர்கள் அறநிலையத்துறைக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். அதனையொட்டி, 3.60 கோடி ரூபாய் மதிப்பில் ஐந்து நிலை கொண்ட ராஜ கோபுரம், 6.34 கோடி ரூபாய் மதிப்பில் திருமாளிகை பக்தி மண்டபம், 2.42 கோடி ரூபாய் மதிப்பில் வசந்த மண்டபம், உள்ளிட்டவை உபய தாரர்கள் மற்றும் பக்தர்கள் மூலம் புனரமைத்து அமைத்து கொள்ள இந்து அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது. அதனையொட்டி, முதல் கட்டமான 66 அடி உயரத்தில், 43 க்கு 23 அடி அகலம் கொண்ட ஐந்து நிலை ராஜ கோபுரம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதற்கான கால்கோள் விழா நேற்று காலை நடைபெற்றது. முன்னதாக கணபதி பூஜை நடைபெறுகிறது. அதனை தொடந்து, 9:15 மணி முதல் 10:15 மணிக்கு கால்கோள் விழா நடைபெற்றது. விழாவில், திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ விஜயகுமார், மேயர் தினேஷ் குமார், அறநிலையத்துறை ஊத்துக்குளி சரக ஆய்வாளர் தினேஷ், கோவில் செயல் அலுவலர் சங்கர சுந்ரேஸ்வரர் மற்றும் ஊர் பொது மக்கள், பக்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கோவில் புணரமைப்பு திருப்பணிக்கு இந்து அறநிலையத்துறை சார்பில், 6 கோடியே, 34 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ராஜ கோபுரத்தை தொடர்ந்து, மண்டபம் உள்ளிட்ட அடுத்தடுத்து பணியை உபய தாரர்கள், பக்தர்கள் மூலம் செய்வதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !