உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லையப்பர் கோயிலில் சண்டிகேஸ்வரர் தேர், வாகனங்கள் வெள்ளோட்டம்

நெல்லையப்பர் கோயிலில் சண்டிகேஸ்வரர் தேர், வாகனங்கள் வெள்ளோட்டம்

திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர், காந்திமதி அம்மன் கோயிலில் புதியதாக செய்யப்பட்ட சண்டிகேஸ்வரர் தேர், யானை வாகனம் மற்றும் பூத வாகனம் ஆகியற்றின் வெள்ளோட்ட திருவீதி உலா நேற்று மாலை நடந்தது.


திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவிலில் ஆனி பெருந்திருவிழா வரும் 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஜூலை 8ம் தேதி காலையில் தேரோட்டம் நடக்கிறது. இந்த ஆண்டு தேரோட்டத்திற்கான ஏற்பாடுகள் விமரிசையாக நடந்து வருகிறது. கடந்த ஆண்டு தேரோட்டத்தின் போது தேர் கயிறு வடங்கள் அறுந்ததால் இந்த ஆண்டு புதிய வடங்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு கோவில் நிதியில் ரூ 59 லட்சம் செலவில் சண்டிகேஸ்வரர் மரத்தேர் புதிதாக செய்யப்பட்டது. ரூ 9 லட்சம் மதிப்பில் யானை வாகனமும் சுமார் 6 லட்சம் ரூபாய் மதிப்பில் மரத்திலான பூத வாகனமும் செய்யப்பட்டுள்ளன. தேரோட்டத்திற்கு முன்பாக சண்டிகேஸ்வரர் தேர் மற்றும் வாகனங்களின் வெள்ளோட்டம் நெல்லையப்பர் கோவில் நான்கு ரத வீதிகளில் நேற்று மாலை நடந்தது. இதில் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !