ஆனி பூசம்; வடலூர் சத்திய ஞானசபையில் ஜோதி தரிசனம்
ADDED :139 days ago
வடலூர்; வடலூர் சத்திய ஞான சபையில் நேற்று ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் மாதந்தோறும் பூசம் நட்சத்திரத்தில், ஆறு திரைகள் விலக்கப்பட்டு ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது. நேற்று ஆனி மாத பூசம் நட்சத்திரம் தினத்தில், ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. நிகழ்வில் வடலூர், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி சுற்றுப்பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பலர் பங்கேற்று ஜோதி தரிசனம் கண்டனர். வாரத்தின் கடைசி வேலை நாளான நேற்று வெள்ளிக்கிழமை மாத பூசம் வந்ததால், வழக்கத்திற்கு மாறாக பக்தர்கள் கூட்டம் குறைந்தே காணப்பட்டது.