உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆஷாட நவராத்திரி; ஆதி சிவன், வாராகி அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

ஆஷாட நவராத்திரி; ஆதி சிவன், வாராகி அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

கோவை; பொள்ளாச்சி ரோடு, ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி அருகே இருக்கும் ஆதி சிவன் - வாராகி அம்மன் கோவிலில் ஆஷாட  நவராத்திரி துவங்கியதை முன்னிட்டு தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெற்று வருகிறது. இதில் இரண்டாம் நாளில் வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் வாராகி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். நிகழ்ச்சியின் முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !