உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / டி.கீரனூர் மாரியம்மன் கோவிலில் ஆக்ரமிப்புகள் அகற்றப்படுமா?

டி.கீரனூர் மாரியம்மன் கோவிலில் ஆக்ரமிப்புகள் அகற்றப்படுமா?

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த டி.கீரனூர் மாரியம்மன் கோவில் பகுதியில் உள்ள ஆக்ரமிப்புகளை அகற்ற கலெக்டருக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது. திருக்கோவிலூர் அடுத்த சந்தப்பேட்டை, கீரனூரில் மாரியம்மன் கோவில் உள்ளது. இதனை சுற்றியுள்ள இடத்தை சில தனி நபர்கள் ஆக்ரமித்துள்ளனர். மண்டபம், தொட்டி, கீரனூர் கிராமங்களில் நடைபெறும் பொது நிகழ்ச்சிகள், தெருக்கூத்து உள்ளிட்ட விழாக்கள் இங்குதான் நடத்தப்படுகிறது.இந்த இடத்தை தனி நபர்கள் ஆக்கிரமித்துள்ளதால், திருவிழா தடைபடுவதுடன் தனி நபர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.ஆக்ரமிப்புகளை அகற்றிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென டி.கீரனூர் கிராம பொதுமக்கள் சார்பில் கலெக்டர், சப்-கலெக்டருக்கு மனு கொடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !