உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேட்டுப்பாளையம் சீரடி சாய்பாபா கோவிலில் குரு பூர்ணிமா விழா

மேட்டுப்பாளையம் சீரடி சாய்பாபா கோவிலில் குரு பூர்ணிமா விழா

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் சீரடி சாய்பாபா கோவிலில், குருபூர்ணிமா விழா நடைபெற்றது. மேட்டுப்பாளையம் அடுத்த குடையூர் மாதேஸ்வரன் மலை அருகே, சத்குரு சாய் சேவா சங்கத்தின் சார்பில் சீரடி சாய்பாபா கோவில் கட்டப்பட்டுள்ளது. இங்கு ஒவ்வொரு வியாழக்கிழமையும் சிறப்பு பூஜையும், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது. ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகின்றனர். கோவிலில் இன்று குரு பூர்ணிமா விழா நடைபெற்றது. காலை, 5:30 மணிக்கு சீரடி சாய்பாபாவுக்கு ஆரத்தியும், அதை தொடர்ந்து அபிஷேக பூஜையும் நடந்தது. மாலையில் சத்குரு சாய் சேவா சங்கத்தின் பஜனையும், பல்லக்கு பவனியும் நடைபெற்றது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை சத்குரு சாய் சேவா சங்க அறங்காவலர்கள், குழு உறுப்பினர்கள் ஆகியோர் செய்து இருந்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !