உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அங்காள பரமேஸ்வேரி கோவில் திருவிளக்கு பூஜை

அங்காள பரமேஸ்வேரி கோவில் திருவிளக்கு பூஜை

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர், ஸ்ரீ ஹரிஹரசுதன் யாத்திரை குழுவின் 5ம் ஆண்டு, திருவிளக்கு பூஜை நடந்தது. ஸ்ரீபெரும்புதூர், அங்காள பரமேஸ்வேரி கோவில் அருகில், யாத்திரை குழுவின் சார்பில், பொது பூஜையும், திருவிளக்கு தீபாராதனையும் நடந்தது. இதனை முன்னிட்டு, நேற்று காலை 6:00 மணிக்கு, சுவாமி அய்யப்பன்,வீதி உலா புறப்பாடு நிகழ்ச்சியும், காலை 7 :00 மணிக்கு கணபதி ஹோமமும், காலை 9:00 மணிக்கு, அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. ஏற்பாடுகளை, ஹரிஹரசுதன் யாத்திரை குழுவினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !