காரைக்கால் அம்மன் உற்சவர் சிலைக்கு சிறப்பு அபிஷேகம்!
ADDED :4758 days ago
காரைக்கால்: காரைக்கால் ஏழை மாரியம்மன் கோவிலுக்குப் புதிதாக திருவாட்சியுடன் ரூ. 1 லட்சம் செலவில் உற்சவர் அம்மன் சிலைக்கு அபிஷேகம் நடந்தது.காரைக்கால் புதிய பஸ் நிலையம் அருகிலுள்ள ஏழை மாரியம்மன் கோவிலில் ரூ.60 லட்சம் செலவில் திருப்பணிகள் முடிந்து கடந்த அக்டோபர் 28ம்தேதி கும்பாபிஷேகம் நடந்தது.48 நாட்கள் நடந்த மண்டலாபிஷேகத்தில் சுவாமி வீதியுலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கும். ஆனால் இக்கோயிலில் சுவாமி புறப்பாடு செய்ய உற்சவர் இல்லாமல் இருந்தது. பக்தர்கள் உற்சவர் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். அம்மன் உற்சவர் சிலையை கும்பகோணம் சுவாமிமலையில் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. திருவாட்சியுடன் அம்மன் உற்சவர் சிலை அமைக்க ரூ. 1 லட்சம் செலவில், 56 கிலோ எடையுடன் இரண்டரை அடி உயரம் கொண்ட சிலை செய்யப்பட்டு அபிஷேகம் நடந்தது.