யானைகுட்டி அய்யனாரப்பன் கோவிலில் ஆடி உற்சவம்; சுவாமி திருவீதி புறப்பாடு
ADDED :77 days ago
விழுப்புரம்; விழுப்புரம் அருகே, யானைகுட்டி அய்யனாரப்பன் கோவிலில் ஆடி உற்சவம் நடந்தது. ஓட்டேரிபாளையத்தில் உள்ள யானைகுட்டி அய்யனாரப்பன் கோவிலில், ஆடி மாத உற்சவம் நேற்று முன்தினம் துவங்கியது. காலை 9.00 மணிக்கு, மூலவருக்கும், தொடர்ந்து உற்சவர்களுக்கும், மகா அபிஷேக, ஆராதனை நடந்தது. இதனை தொடர்ந்து மூலவர் சிறப்பு மலர் அலங்காரத்தில் பூரணி, பொற்கலை தாயாருடன் அருள் பாலித்தார். மாலை 6.00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தொடர்ந்து, இரவு 9.00 மணிக்கு உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி புறப்பாடு நடந்தது.