தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
ADDED :61 days ago
வேடசந்தூர்; இ.சித்தூர் ஊராட்சி வரப்பட்டியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பெருமாள், ஸ்ரீ அஜ்ஜப்பன், ஸ்ரீ வீரபத்திரர், ஸ்ரீ பட்டவன் பாப்பாத்தி, ஸ்ரீ மதுரை வீரன் கோயில்களின், பெரிய கும்பிடு விழா நடந்தது. கங்கணம் கட்டுதல், கரகம் பாலித்தல், பிறந்த வீட்டுப் பிள்ளைகள் பச்சை மண்பானையில் பொங்கல் வைத்து சாமிக்கு அபிஷேகம் செய்தல் மற்றும் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.