உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி வெள்ளி; அம்மன் கோவில்களில் பக்தர்கள் பரவசம்

ஆடி வெள்ளி; அம்மன் கோவில்களில் பக்தர்கள் பரவசம்

அன்னூர்; அன்னூர் வட்டாரத்தில், ஆடி வெள்ளியை முன்னிட்டு, அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஆடிவெள்ளியை முன்னிட்டு, அன்னூர் அருகே கணேசபுரம், புற்றுக்கண் மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு நாக அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. திரளான பக்தர்கள் வழிபட்டனர்.  கோவில்பாளையம் அருகே குரும்பபாளையத்தில் உள்ள ஆதி சக்தி அம்மன் கோவிலில் நேற்று அம்மன் வளையல் அலங்காரத்தில் அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !