திருநெல்வேலி கெட்வெல் கனகமகாலட்சுமிக்கு சிறப்பு வளைகாப்பு அலங்காரம்
ADDED :130 days ago
திருநெல்வேலி: திருநெல்வேலி, ஜங்ஷன் கெட்வெல் ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் உள்ள தாயார் கனக மகாலட்சுமி, வளைகாப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
இன்று ஆடி வெள்ளி, வரலட்சுமி விரதத்தை முன்னிட்டுநெல்லை ஜங்ஷன் கெட்வெல் ஆஞ்சநேயர் கோயில் வளாகத்தல் உள்ள கனக மகாலட்சுமிக்கு புதுப்புடவை, ஆபரணம் அணிவித்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அம்மன் சிறப்பு வளைகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கெட்வெல் கோவில் பட்டார்ச்சார்யார், பக்தர்கள் செய்திருந்தனர்.