உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை ரமணா ஆசிரமத்தில் கும்பாபிஷேகம்; ட்ரோன் மூலம் புனித நீர் தெளிப்பு

திருவண்ணாமலை ரமணா ஆசிரமத்தில் கும்பாபிஷேகம்; ட்ரோன் மூலம் புனித நீர் தெளிப்பு

திருவண்ணாமலை; திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ரமணா ஆசிரமத்தில் நடந்த கும்பாபிஷேக விழாவில் கோபுர கலசத்திற்கு சிவாச்சாரிகள் புனித நீர் ஊற்றினார். இதில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு வழிபட்டனர்.


திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள ரமணாசிரமம், தமிழகம் மட்டுமல்லாது உலக முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வரும் ஒரு முக்கிய ஆன்மிக மையமாகத் திகழ்கிறது. இங்கு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதற்கு முன்பு 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவானது ஆகஸ்ட் 18ம் தேதி துவங்கி இன்று வரை மூன்று நாட்களுக்கு நடைபெற்று வந்தது. இன்று காலை சிறப்பு வழிபாடுகளுக்கு பின் கோபுர கலசத்திற்கு சிவாச்சாரிகள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். விழாவில் ட்ரோன் மூலம் பூக்கள் மற்றும் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  இதில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !