ராமேஸ்வரம் கோயிலில் கண்காணிப்பு கேமரா!
ADDED :4771 days ago
ராமநாதபுரம்: ராமேஸ்வரம் கோயிலில் கண்காணிப்பை பலப்படுத்த, முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன, என ராமநாதபுரம் எஸ்.பி., மயில்வாகனன் தெரிவித்தார். அவர் கூறியதாவது: ராமநாதபுரம் போலீஸ் நிர்வாக அலுவலகத்திற்கு தனி கட்டடம் 4 கோடி ரூபாயில் கட்டப்பட உள்ளது. திருவாடானை, கமுதியில் தொடர்பு கொள்வதில் பிரச்னை உள்ளதால், இரண்டு தகவல் தொடர்பு "டவர்கள் அமைக்கப்பட உள்ளன. மேலும் ராமேஸ்வரம், ஏர்வாடியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவற்கான இடங்கள் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. கேமரா காட்சிகள் பதிவு செய்யப்படும். ராமேஸ்வரம், ராமநாதபுரம், பரமக்குடியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.