உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்சுழி பஞ்சமுகேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

திருச்சுழி பஞ்சமுகேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

திருச்சுழி; திருச்சுழி அருகே பஞ்சமுகேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. திருச்சுழி அருகே கீழகண்டமங்கலம் கிராமத்தில் சிவனடியார்கள் சார்பில், 11 அடி உயரத்தில் ஒரே கல்லில் 5 முகங்களான ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம் என்ற பஞ்ச முகம் கொண்ட பஞ்சமுகேஸ்வரர் மற்றும் அபயாம்பிகை அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. மங்கள இசை, புண்யாகவாசனம், கணபதி பூஜை, மகாலட்சுமி ஹோமம், முதல் கால யாகம் நடந்தது. இன்று காலை கடம் புறப்பாடு, கோபுர கலசங்கள், பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. பஞ்சமுகேஸ்வரருக்கு 17 வரையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. ஏற்பாடுகளை விழா நிர்வாகிகள் சிவனடியார்கள், ராஜபாண்டி, சுந்தரமூர்த்தி செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !