திருப்பூர் ஸ்ரீராஜ கணபதி கோவில் கும்பாபிஷேகம்
ADDED :118 days ago
திருப்பூர்; அக்ரஹாரப்புத்துார் ஸ்ரீ ராஜகணபதி, மாகாளியம்மன், ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடந்தது. கடந்த 1ம் தேதி, குழந்தை வேலாயுதசாமி கோவிலில் இருந்து முளைப்பாரி மற்றும் தீர்த்தம் குடம் ஊர்வலம் நடந்தது. நவீன் குழுவினரின் வள்ளி கும்மி மற்றும் ஒயிலாட்டமும், கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. கடந்த 2ம் தேதி காலை முதல் யாகசாலை பூஜைகள் நடந்தன. இன்று அதிகாலை, நான்காம் கால யாக பூஜை நிறைவுற்று கும்பாபிஷேகம் நடந்தது. ராஜ விநாயகர், வரதராஜ பெருமாள், மாகாளியம்மன் கோவில் கோபுரங்களுக்கும், மூலவர்களுக்கும், கும்பாபிஷேகம் நடந்தது. கோ பூஜை சர்வதரிசன பூஜைகள் நடைபெற்றது. கடந்த நான்கு நாட்களாக, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.