புரட்டாசி மாத பிறப்பு, ஏகாதசி; பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
ADDED :54 days ago
கோவை; புரட்டாசி மாதம் பிறப்பு மற்றும் ஏகாதசி திதியை முன்னிட்டு கோவை மாவட்டம் மற்றும் கோவை நகர் பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது. இதில் உக்கடம் கோட்டைமேடு பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் உற்சவமூர்த்தி ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் கோவை நகர் பகுதியில் உள்ள முக்கிய பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.