மேல்மலையனூர் பிரம்மன் கோவிலில் தாலாட்டு உற்சவம்
ADDED :12 days ago
செஞ்சி; மேல்மலையனூர் லட்சுமி நாராயண அஷ்டலஷ்மி கோவில் ஆதி பிரம்மனுக்கு அமாவாசை தாலாட்டு உற்சவம் நடந்தது.
மேல்மலையனூர் லட்சுமி நாராயண அஷ்டலட்சுமி மற்றும் ஆஞ்சநேயர் கோவிலில் ஆதி பிரம்மனுக்கு புரட்டாசி மாத அமாவாசை ஊஞ்சல் தாலாட்டு நடந்தது. அதை முன்னிட்டு காலை 9 மணிக்கு ஆஞ்சநேயர் மற்றும் ஆதி பிரம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் மகா தீபாராதனை நடந்தது. இரவு 7 மணிக்கு ஆதிபிரம்மனுக்கு மகா தீபாரதனையும், ஊஞ்சல் தாலாட்டு உற்சவமும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.