மதுரை மயில்வேல் முருகன் கோவிலில் நவராத்திரி 2ம் சிறப்பு அலங்காரம்
ADDED :11 days ago
மதுரை, மயில்வேல் முருகன் கோவிலில் நவராத்திரி 2-ம் நாளில் ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மதுரை, மதுரை மேலக்கால் மெயின் ரோடு கோச்சடையில் மயில்வேல் முருகன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் 3 நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம், ஷஷ்டி மண்டபம் அமைத்தும், விநாயகர், ஆஞ்சநேயர், தட்சனாமூர்த்தி, லட்சுமி ஹயக்கீரிவர், ஜயப்பன், எல்லாம் வல்ல சித்தர், துர்க்கா தேவி, நவகிரஹ சந்நிதிகளுடன் புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ளது. இக்கோவிலில் இந்தாண்டு நவராத்திரி விழா சிறப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் இரண்டாம் நாளில் பாலாதிரிபுரசுந்தரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.