திருவொற்றியூர் தியாகராஜர் சுவாமி கோவிலில் நவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
சென்னை; திருவொற்றியூர் பழமை வாய்ந்த ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர் தியாகராஜர் சுவாமி வடிவுடை அம்மன் கோவிலில் புரட்டாசி மாதம் நவராத்திரி திருவிழா பக்தர்கள் முன்னிலையில் கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருவொற்றியூர் ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோவிலில் மிகவும் பழமை வாய்ந்த கோயில் இதில் பல சித்தர்கள் ஞானிகள் வந்து வழிபட்ட ஸ்தலமாகும் இதில் நின்ற கோலத்தில் இருக்கும் வடிவுடையம்மனை பல ஊர்களில் இருந்து பக்தர்கள் தரிசிக்க ஏராளமானவர்கள் வருவது வழக்கம். இந்த நிலையில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்து உற்சவ சிலைக்கு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு தபசு அலங்காரத்தில் பல்லக்கில் அமரவைத்து கலசம் வைத்து பரிகார பூஜைகள் யாக பூஜைகள் செய்து கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரத்திற்கு பால் தயிர் மஞ்சள் இளநீர் ஆகிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனைகள் செய்து பட்டாச்சாரியார்கள் முன்னிலையில் சங்கநாதம் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் ஓம் சக்தி வடிவுடைய நாயகி என கோஷமிட்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். இந்த நிகழ்வைத் தொடர்ந்து தபசு அலங்காரத்தில் வீற்றிருக்கும் அம்மனை கோயில் நான்கு மாத வீதி வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு விநாயகர் முன்செல்ல அம்மன் சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட தெய்வங்களை பல்லக்கில் தூக்கி ஊர்வலமாக மேளதாளம் முழங்க கொண்டு சென்றனர் இதனை விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் கோவில் நிர்வாகிகள் ஊழியர்கள் தரிசித்து வழிபட்டனர். தினமும் ஒவ்வொரு நாளும் 9 நாட்கள் அம்மன் அலங்காரமாக உமா மகேஸ்வரி, மகிசாசுரமர்த்தினி, மோகினி அலங்காரம் உள்ளிட்ட 9 அலங்காரங்களில் அம்மன் கோவில் பிரகாரத்தில் சுற்றிவந்து பின்னர் நான்கு மாத வீதி வழியாக சுற்றி வந்து காட்சி தருவார் இதை ஒன்பது நாள் விரதம் இருந்து தரிசிப்பவர்களுக்கு கோடி புண்ணியம் நீண்ட ஆயுள் நோயற்ற வாழ்வு கிடைக்கும் என்று தெரிவித்தார். இன்று மிக விமர்சியாக நடைபெற்ற கொடியேற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வழிபட்டனர்..