திருப்பதியில் அங்குரார்ப்பணம்; இன்று பிரம்மோற்சவம் துவக்கம்
திருப்பதி; திருப்பதியில் இன்று மாலை பிரம்மோற்சவம் துவங்கிறது. இதன் முதல் நிகழ்ச்சியாக நேற்று செப்., 23 மாலை அங்குரார்ப்பணம் எனப்படும் விதைகள் நட்டுச் செய்யப்படும் தொடக்கச் சடங்கு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம செய்தனர்.
திருமலை – திருப்பதியில் ஆண்டுதோறும் நடைபெறும் மிகப்பெரிய ஆன்மிக விழாவான நவராத்திரி பிரம்மோற்சவம் இந்தாண்டு இன்று செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 02 வரை நடைபெற உள்ளது. ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த விழாவில்,நாள்தோறும் விதவிதமான வாகன உலா நடைபெற உள்ளது. திருமலையில் வருடம் முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகின்றன. அவற்றில் உச்சமாகக் கருதப்படுவது வருடாந்திர பிரம்மோற்சவம் தான். “மக்கள் கடல்” என்று அழைக்கப்படும் அளவுக்கு பக்தர்கள் கூடுவர்,விழாவின் ஒவ்வொரு நாளும் ஸ்ரீ மலயப்பசுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடனும்,சில நாட்களின் தனியாகவும் பல்வேறு வாகனங்களில் திருவீதிகளில் உலா வந்து பக்தர்களை அருள்பாலிப்பார்.சுவாமி உலா வரும்போது அவருக்கு முன்பாக மாடவீதியில் பல்வேறு மாநில கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.