காளஹஸ்தி கோயில்களில் நவராத்திரி விழா; நகர் எங்கும் பக்தி பரவசம்
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் நகரில் உள்ள மற்ற அம்மன் கோயில்களில் நவராத்திரி விழா கொண்டாட்டங்கள் தொடங்கி இரண்டாவது நாளாக கோயில்களில் திரளான பெண் பக்தர்களால் நிரம்பியிருந்தன.
நகரத்தில் உள்ள வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் அம்மனை சிறப்பு மலர்களாலும் அணிகலன்களாலும் அலங்கரிக்கப்பட்டன. செவ்வாய்க்கிழமை காலை பஜார் தெருவில் உள்ள வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில், ஆர்ய வைஷ்ய பிரமுகர்கள் நகரில் அம்மன் ஊர்வலம் நடத்தினர். இதே போல் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலின் துணை கோயில்களில் நவராத்திரி கொண்டாட்டங்கள் பிரமாண்டமாகத் தொடங்கி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பாஸ்கர் பேட்டையில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். காளஹஸ்தி சிவன் கோயிலில் வீற்றிருக்கும் ஞானப் பிரசுனாம்பிகை தாயார் பிரம்மச்சாரினி தேவியாகவும், ஏழு கங்கை அம்மன் கோயிலில் பிரம்மச்சாரினி தேவியாக பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வேடாம் கிராமத்தில் வீற்றிருக்கும் காளிகா தேவி அம்மன் காயத்ரி தேவியாகவும், ஸ்ரீகாளஹஸ்தி அடுத்துள்ள பானகல் பகுதியில் வீற்றிருக்கும் பொன்னாலம்மன் லலிதா தேவி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா ஏற்பாட்டை கோயில் செயல் அலுவலர் பாபி ரெட்டி மற்றும் அதிகாரிகள் கிருஷ்ணா ரெட்டி, ஹேமமாலினி லட்சுமய்யா ஆகியோர் பிரமாண்டமாக செய்துள்ளனர்.