உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புவனகிரி பெருமாத்துார் ஈஸ்வரன் கோவிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி

புவனகிரி பெருமாத்துார் ஈஸ்வரன் கோவிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி

புவனகிரி; புவனகிரி பெருமாத்துார் ஈஸ்வரன் கோவிலில், சிதம்பரம் ஸ்ரீ வில்வம் அறக்கட்டளை சார்பில் உலக நன்மை வேண்டி திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.சிதம்பரம், ‘தில்லைஆடல் வல்லான் சிவனடியார்கள் திருவாசகம் முற்றோதல்‘ அமைப்பின் சார்பில் சிவன் கோவில்களில் உலக நன்மை வேண்டியும், மக்கள் நலமுடன் வாழ வேண்டியும், விவசாயம் மற்றும் தொழில் வளம் சிறக்கவும் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். நேற்று புவனகிரி பெருமாத்துார் ஈஸ்வரன் கோவிலில் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது. புவனகிரி பொன்னுசாமி அறக்கட்டளை நிர்வாகி முருகவேல் வரவேற்றார். அறக்கட்டையில் நிர்வாகி திருநாவுக்கரசு, குருநாதர் சிவகருணாநிதி உள்ளிட்ட ஏராளமானவர்கள் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !