உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புரட்டாசி இரண்டாம் சனி; குதிரை வாகனத்தில் மணவாள பெருமாள் உலா

புரட்டாசி இரண்டாம் சனி; குதிரை வாகனத்தில் மணவாள பெருமாள் உலா

முத்தியால்பேட்டை; புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையையொட்டி, ஏரிவாய் மணவாளப் பெருமாள், குதிரை வாகனத்தில், ராஜ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காஞ்சிபுரம் அடுத்த, முத்தியால்பேட்டை ஊராட்சி, ஏரிவாய் கிராமத்தில், 1,000 ஆண்டுகளுக்கு முன், சோழ மன்னர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கமலவல்லி தாயார் சமேத அழகிய மணவாளப் பெருமாள் கோவில் உள்ளது.  புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையையொட்டி இன்று காலை 6:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம், மஹா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து உற்சவர் மணவாள பெருமாள், ராஜ அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !