ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் அஷ்டமி பூஜை; கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :220 days ago
கோவை; கோவை ராம் நகர் வி.என். தோட்டம் ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் புரட்டாசி வளர்பிறை அஷ்டமி தினத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் இருக்கும் கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் கால பைரவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
புரட்டாசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு கோவை பெரியநாயக்கன்பாளையம் -குப்பிச்சிபாளையம் ரோடில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம் ,பூஜை நடந்தது இதில் சந்தன காப்பு அலங்காரத்துடன் புஷ்ப அலங்காரத்தில் அருள் பாலித்த முருகப்பெருமானை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.